கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை...!!

 
கிணறு நீச்சல் மீட்பு

 
சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன் இவருடைய மகள் ஆசிகா. இவர்  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்  நவம்பர் 11ம் தேதி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் உள்ள தங்கள் குலதெய்வமான ஆனந்தாயி அம்மன் கோயிலுக்கு  சென்றுள்ளார். கோவிலுக்கு தனியாக சென்ற ஆசிகா மீண்டும்  வீடு திரும்பவே இல்லை. இதனால் குடும்பத்தினர் அவரைத்   தேடி வந்தனர்.இது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஆசிகா

இந்த தேடுதலில்  கோயில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில்  ஆசிகா வந்துவழிபட்ட காட்சிகள்  பதிவாகியிருந்தது. வழியில் அப்பகுதியில் உள்ள  செங்கோட்டுவேல்    என்ற விவசாயியின்  தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றில் ஆசிகாவின்   உடல் தண்ணீரில் மிதப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக தகவலின் பேரில் விரைந்த தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி  பெண்ணின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆம்புலன்ஸ்


 ஆசிகா கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.   கோயிலில் வந்து சாமி கும்பிட்ட பிறகு அங்குள்ள கிணற்றை நோக்கி ஆசிகா செல்வதும், அவராகவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து  தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஆசிகாவுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web