ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் அடாவடி... அதிர்ச்சி வீடியோ!

ஜூலை 5ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபட்டனர். அதில் பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிராட்வே 2 பூந்தமல்லி ரூட் மாணவர்கள் ரூட்டு தல விவகாரத்தில் சாலையின் நடுவே பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.
ரூட் தல விவகாரம்- பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடாவடி!
— Spark Media (@SparkMedia_TN) July 9, 2024
கடந்த 5-ந்தேதி ரூட் தல விவகாரத்தில் பேருந்து மீது ஏறி மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை… pic.twitter.com/HQTi1otuOp
பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் சாலையின் சென்ற பயணிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்த வீடியோவும் வெளியாகியுள்ளது.போலீசார் முன்னிலையில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். கல்லூரியில் குறுக்காக நின்று சாலை மறியலை ஏற்படுத்தியதும், சாலையின் நடுவே பட்டாசு வெடித்து போக்குவரத்தை தடுத்தனர்.
இது குறித்த வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!