பைக்குகள் மோதி விபத்து... பெண் பரிதாப சாவு!

 
பைக்
கயத்தாறு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம் சாயமலை சிதம்பரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளியம்மாள் (56). இவர்கள் நேற்று முன்தினம் காலையில் கட்டாலங்குளம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அந்த நிகழ்ச்சி முடிந்து மாலையில் மீண்டும் கட்டாலங்குளத்தில் இருந்து சிதம்பர புரத்திற்கு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ்

செட்டிகுறிச்சி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வடக்கு கோனார்கோட்டை கிராமத்திலிருந்து செட்டிகுறிச்சியை நோக்கி குற்றாலிங்கம் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதில் 3 பேரும் 108 ஆம்புலன்ஸில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

போலீஸ்

அங்கு மற்ற 2பேருக்கும் லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமைடந்த வள்ளியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார் இறந்து போன வள்ளியம்மாளுக்கு 3 மகன்கள் உள்ளனர். இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?