சூர்யப்புயலால் வானில் வர்ண ஜாலம்...வைரல் வீடியோ, புகைப்படங்கள்!

 
சூர்யப்புயல்

20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று  பூமியைத் தாக்கியது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில்  வானில்   கண்கவர் வர்ணஜாலக் காட்சிகள் தோன்றின. ஆனால், இந்தச் சூரியப் புயலால் செயற்கைக்கோள்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  


அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு இதுகுறித்த பதிவினை வெளியிட்டுள்ளது.அ தில்  கரோனல் மாஸ் எஜெக்ஷன்  எனப்படும் சூரியன் பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை வெளியேற்றும் நிகழ்வு, தீவிர புவி காந்த புயலாக மாறியுள்ளது.
அக்டோபர் 2003ல்   இதேபோல சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. அந்த சூர்ய புயல் "ஹாலோவீன் புயல்கள்" என்று அழைக்கப்பட்டது.  

சூர்யப்புயல்

சூர்யப்புயல்

சூர்யப்புயல்

சூர்யப்புயல்

சூர்யப்புயல்

அந்தச் சூரியப்புயலின் தாக்கத்தால் ஸ்வீடனில் மின்தடை ஏற்பட்டது. தென்னாப்பிரிக்காவில் பவர் கிரிட்டுகள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த சூரியப் புயலைத் தொடந்து, இனி வரவிருக்கும் நாட்களில் மேலும் சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   
இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சூரியப் புயல் பூமியைத் தாக்கியபோது வானில் தோன்றிய விண்ணமயமான காட்சிகளை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். 
சூரியப்புயலால் பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள  செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பவர் கிரிட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web