’உதவிக்கு வா மா’.. பாசமாய் அழைத்த தாத்தா.. நம்பி சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. 90 வயது முதியவர் போக்சோவில் கைது!

 
நாராயணசாமி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நாராயணசாமி என்ற 90 வயது முதியவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணில் மருந்து போட யாரும் இல்லை என அப்பாவியாக கூறிய முதியவர், சிறுமியை வீட்டுக்கு வருமாறும், கண்களில் மருந்து போடுமாறும் அழைத்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

தாத்தா தானே என்ற பழக்கத்தில், சிறுமியும் முதியவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ​​சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.

கைது

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் 90 வயதான நாராயணசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web