’வாங்க நான் ட்ராப் பண்றேன்’.. நம்பி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது!

 
குமரவேல்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 59 வயது பெண் ஒருவர், பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தர்காவுக்கு வாரந்தோறும் செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று தர்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அந்த பெண்ணிடம் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அவரை நம்பி அந்த பெண்ணும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரிடமிருந்து தப்பிக்க புதுச்சேரி மெயின்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்தார். அதன்பின், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்த பெண்ணுக்கு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த நபரை தேடி வந்தனர்.

கைது

இது தொடர்பான விசாரணையில் பாப்பாகோவில் அருகே பெரிய நரியங்குடி பகுதியை சேர்ந்த சலூன் கடைக்காரர் குமரவேல் (வயது 36) என்பவர் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. நேற்று பிரச்னைக்குரிய கடைத்தெருவில் நின்று கொண்டிருந்த குமாரவேலுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web