ஜாலி ... நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி!

 
குணசேகரன்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலையத்தில் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். இரண்டு பெண்கள் அவரை உல்லாசத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வந்த பெண்களின் காதலர்கள் திடீரென போட்டோ, வீடியோ எடுத்தனர். என்னிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

புகாரின் பேரில் டிஎஸ்பி தனஜெயம், இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, சண்முக நதி அருகே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு கார்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (வயது 40), நத்ததைச் சேர்ந்த பாலமுருகன் (37), லோகநாதன், பவித்ரா (24), காமாட்சி (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

கைது

விசாரணையில், ரமேஷிடம் கொள்ளையில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. அதன்பிறகு அவர்கள் எக்ஸ்யூவி கார் திருடப்பட்டதும், கொடைக்கானலில் நிசான் கார் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரிவாள், மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்த போலீஸார், ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொடைக்கானலிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web