கழகத் தொண்டர்கள் கண்ணீரில் ... ஒன்று சேருங்க தலைவர்களே... வைரலாகும் போஸ்டர்!

 
அதிமுக

  18வது மக்களவைத் தேர்தலில்  அதிமுக வரலாறு காணாத தோல்வி அடைந்து 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பல இடங்களில் 3 வது மற்றும் 4 வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது.  இதனையடுத்து சசிகலா இனியாவது அனைவரும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி மறந்து கட்சிக்காக ஒன்றுபடுவோம். தாய் வழி வந்த சிங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி நடந்தால்  நாளை நமதே என எம்ஜிஆரின் பாடல் வரிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

சசிகலா

அதே போல் ஓபிஎஸ்சும் ஒன்றிணைய தயார் என கூறியுள்ளார். சசிகலாவும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த நிலையில் சிவகங்கை திமுக தொண்டர்களும் இதே கருத்தை வலியுறுத்தி  சிவகங்கை மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டரில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம்.
சிதறி கிடக்கும் கழகத் தொண்டர்களை ஒன்றுப்படுத்துவோம். அதிமுகவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல உறுதி ஏற்போம் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web