சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக புகார்.. இணையத்தில் வைரலாகும் பகீர் பதிவு!

 
சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவரது ஆட்டத்தை பார்த்து பலர் கிரிக்கெட்டில் இறங்கினர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருப்பினும், இன்றும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சச்சின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் பதிவிட்ட X தளத்தில் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


மும்பையில் உள்ள சச்சின் வீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக மிக்ஸிங் மிஷின் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு நேரத்திலும் கட்டுமான பணி நடப்பதால், அருகில் உள்ளவர்களுக்கு தொல்லையாக இருந்துள்ளது. அதாவது, இயந்திரத்தின் சத்தம் எரிச்சலடைய வைத்துள்ளது. இதனையடுத்து சச்சினுக்கு அறிவுரை கூறும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அன்புள்ள @sachin_rt, இரவு 9 மணி ஆகிறது, உங்கள் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே சிமென்ட் கலவை நாள் முழுவதும் பெரிய சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சத்தமாக ஒலிக்கிறது. உங்கள் வீட்டுப் பணியாளர்களை நியாயமான நேரத்தை வைத்திருக்குமாறு தயவுசெய்து கேட்க முடியுமா? மிக்க நன்றி." இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இடுகை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தவிர, இது 500 க்கும் மேற்பட்ட மறுபதிவுகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த பதிவிற்கு பல நெட்டிசன்கள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web