ஆட்சியை இழந்தது பாஜக... கர்நாடக பாஜக அலுவலகத்தில் புகுந்து மிரட்டிய நல்ல பாம்பால் அலறிய தொண்டர்கள்!

 
பாஜக

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பகுதி அண்மையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

பாஜக

மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் தனது சொந்த தொகுதியான சிக்கோனில் உள்ள பாஜக  முகாம் அலுவலகத்திற்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வருகை தந்தார். அவரது ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர். 

பாஜக

இந்த நிலையில், பாஜக முகாம் அலுவலகத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். முதலமைச்சர் முன்னிலையில் அதிகாரிகள் நல்ல பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web