சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

 
வீணா ஜார்ஜ்

கேரள மாநிலம் கோட்டயத்தில்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இந்த மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை கட்டிட விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. 

வினா ஜார்ஜ்

மருத்துவமனையில் 10ம் வார்டில் உள்ள கழிவறைப்பகுதியின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிந்து என்ற பெண் உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் பதவி விலக வேண்டும் எனக் கூறி  காங்கிரஸ், பாஜக உட்பட பல  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர்   வீணா ஜார்ஜ் பதவி விலக வலியுறுத்தி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், பாஜக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. கேரள அரசுக்கு எதிராகவும், சுகாதாரத்துறை அமைச்சருக்கு   எதிராகவும் கோஷங்களை எழுப்பி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?