காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரண வழக்கு.. 75 ஆயிரம் செல்போன் எண்களை ஆய்வு செய்யும் சி.பி.சி.ஐ.டி!

 
ஜெயக்குமார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இரு அணிகளாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பின்னர் உடல் கிடந்த 7 ஏக்கர் தோட்டத்தில் துப்புக்காக அங்குலம் அங்குலமாக தேடினார்கள்.

ஜெயக்குமார்

ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சடலம் கிடந்த பகுதியில் சம்பவம் நடந்த இரவு முதல் காலை வரை பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் பெற்றுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேபிகே ஜெயக்குமார்

இதில் நீண்ட நேரம் பேசிய எண்களும், சில நிமிடங்கள் பேசிய எண்களும் தனித்தனியாக  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமான எண்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குட்டம் பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அதை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web