”இது என் கணவர் கிடையாது...” காங்கிரஸ் பிரமுகரின் மனைவி புகாரால் டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு!

 
ஜெயக்குமார்

 தமிழகத்தில் திருநெல்வேலி  கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானார். இவர் தேடப்பட்டு வந்த நிலையில் திடீரென எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  தமிழகம் முழுவதும் இந்த  பலி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழந்த விவகாரத்தில் ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.  

கேபிகே ஜெயக்குமார்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், தனது உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் வந்த வண்ணம் இருப்பதாக  நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஏப்ரல்  30ம் தேதி புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில்  அன்றைய தினமே திடீரென காணாமல் போனார். இதுகுறித்து  அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், புகார் மீது காவல்துறை அலட்சியமாக இருந்ததாகவும் அவரது உடல் கடந்த 4 ம் தேதி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.  

ஆம்புலன்ஸ்

ஜெயக்குமாரின் மனைவி அது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்ய ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web