காங்கிரஸ் எம்எல்ஏ சஸ்பெண்ட்... பாலியல் புகார் குற்றச்சாட்டு!

 
காங்கிரஸ்

கேரள முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்  ராகுல் மம்கூத். இவர் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 


இதனையடுத்து  பாலக்காடு தொகுதி எம்எல்ஏ.வும் கேரள முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மம்கூத்ததில் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


ராகுல் மம்கூத்தத்தில் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, இன்று அவரை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக ராகுல் மம்கூத்ததில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  தற்போது அவரது கட்சி உறுப்பினர் பதவியையும் காங்கிரஸ் பறித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?