திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா... நாளை முதல் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு விழா வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது. கோவில் குடமுழுக்கையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று, குடமுழுக்கையொட்டி திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
குடமுழுக்கு விழாவை ஒட்டி வருகிற 4ம் தேதி முதல் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!