திருச்செந்தூரில் குடமுழுக்கு திருவிழா... 7ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு வருகிற 7ம் தேதி நெல்லை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே வருகிற 7ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி திருநெல்வேலி-திருச்செந்தூர் சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் 06101 திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.
மறு மார்க்கத்தில், சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் 06102 காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மதியம் 12.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குரும்பூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!