காதலியை அடித்தே கொன்ற இந்திய வம்சாவளி.. 20 ஆண்டு கடுங்காவல் தண்டணை அளித்து பரபரப்பு தீர்ப்பு!

 
சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எம்.கிருஷ்ணன். ஏற்கனவே திருமணமான இவர், வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி தனது காதலியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கிருஷ்ணன் மல்லிகா பேகம் ரஹ்மான்சா அப்துல் ரஹ்மானை (வயது 40) அடித்து உதைத்தார், அவர் ஜனவரி 17, 2019 அன்று இறந்தார்.

கணவன் மனைவி சண்டை

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிருஷ்ணனின் மனைவி தனது கணவரும், அவரது காதலியும் தங்கள் வீட்டின் மாஸ்டர் படுக்கையறையில் மது அருந்துவதைக் கண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கிருஷ்ணனை கண்டித்துள்ளார், உடனே கிருஷ்ணா கோவத்தில் மனைவியை தாக்கினார். பின்னர் இது காவல்துறை வரை சென்று பெரும் பிரச்சனையாக மாறியது.

பின்னர் அவரது மனைவி போலீசாரின் உதவியை நாடியதாகவும், கிருஷ்ணனை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணன் தனது காதலியுடன் உறவை தொடர்ந்துள்ளார். ஆனால், 2018-ம் ஆண்டு, கிருஷ்ணன் ஒரு பிரச்சனையால் சிறைக்குச் சென்றபோது, அப்போது மல்லிகா பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தது கிருஷ்ணனுக்குத் தெரியவந்தது. இந்த நிலையில்தான் 2019 ஜனவரி 15ஆம் தேதி கிருஷ்ணன் மல்லிகாவை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. அவர் மல்லிகாவின் விலா எலும்பில் குத்தியுள்ளார், அவள் நிலை தடுமாறி அருகில் இருந்த அலமாரியில் இடித்துக்கொண்டு விழுநந்துள்ளார். மறுநாள், மல்லிகா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அவர் பல வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டார்.

மல்லிகா மருத்துவமனையில் இருந்தபோது, கிருஷ்ணன் நாள் முழுவதும் மது அருந்தியுள்ளார். இரவில், கிருஷ்ணா மல்லிகாவின் சகோதரியிடம் தொலைபேசியில் மல்லிகாவுக்கு வேறு ஒருவருடன் உள்ள உறவைப் பற்றி பேசியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மல்லிகா குணமடைந்ததும் மீண்டு வந்த பின்னும் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் தரையில் கிடந்த மல்லிகாவை தூக்கி செல்ல கிருஷ்ணன் முயன்றார். அப்போதுதான் மல்லிகா பேசாமல் படுத்திருந்தாள்.

கிருஷ்ணன் உடனடியாக குடிமைத் தற்காப்புப் படைக்கு போன் செய்து அழைத்துள்ளார். அவர்கள் வருகை தந்து மல்லிகா இறந்துவிட்டதாக அறிவித்தார். உடனடியாக கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், சிங்கப்பூர் நீதிமன்றம் கிருஷ்ணாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணன் பலமுறை மேல்முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web