தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர்.. கள்ளக்காதலனை போலீசிடம் பிடித்து கொடுத்த இளம்பெண்!

 
கள்ளக்காதல்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த முஹம்மது பிலால் (27) என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், இருவரும் அடிக்கடி சுற்றித்திரிந்துள்ளனர்.

கள்ளக்காதல்

நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க முகமதுவிடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார். ஆனால், தன்னுடன் உல்லாசமாக இருப்பதை நிறுத்தாவிட்டால் கணவன் மற்றும் உறவினர்களிடம் கூறுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கடைக்கு இளம்பெண் சென்று கொண்டிருந்தார்.

கைது

அப்போது அங்கு வந்த கள்ளக்காதலன் முகமது பிலால் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் செய்துவிட்டு சென்று விட்டார். இதனால் பொறுமை இழந்த அந்த இளம்பெண் வேறு வழியின்றி உக்கடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web