தொடர் விடுமுறை.. தவிக்கும் சுற்றுலா பயணிகள்... குற்றாலத்தில் குளிக்க தடை... கொடைக்கானலில் படகு சவாரி நிறுத்தம்.. பழனி கோவிலில் நடை சாத்தப்பட்டது!
ஆயுதபூஜை, வார இறுதி நாட்கள் என்று தொடர் விடுமுறை காரணமாக பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் கிளம்பிச் சென்றுள்ள நிலையில், குற்றாலம், கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களிலும் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. நேற்றும் கொடைக்கானலில் தொடர்ந்து 3 மணி நேரமாக கனமழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே எங்கும் சுற்றிப் பார்க்க செல்ல முடியாமல் அறைகுள்ளேயே அடைந்து கிடந்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அவ்வப்போது ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கொடைக்கானலில் அண்ணாசாலை, ஏரி சாலை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்தே மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பலரும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தனர்.
அதே போன்று குற்றாலத்திலும் தொடர் விடுமுறையால் குவிந்த பயணிகள், ஆர்ப்பரிக்கும் அருவிகளில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக குளிக்க அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பழனி மலைக்கோவிலில் இன்று நடை சாத்தப்படுவதால் காலை 11 மணி முதலே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பழனியிலும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
