தொடர் மழை... ரயில் பாதையில் பெரிய பெரிய பாறைகள்... ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

 
தொடர் மழை... ரயில் பாதையில் பெரிய பெரிய பாறைகள்... ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், குன்னூர் - உதகை இடையே மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில் பாதைகளை சீரமைக்கும் வரை தற்காலிகமாக ஊட்டி மலை ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டது. என்றபோதும் வழக்கம் போல் குன்னூர் - உதகை இடையே மலை ரயில் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால், நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக மூன்று இடங்களில் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் குன்னூலிருந்து உதகைக்கு செல்ல வேண்டிய மலை ரயில் ரத்து செய்யப்பட்டு, குன்னூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மலை ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!