அடுத்த சர்ச்சை... இஸ்லாமியர்கள் குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இஸ்லாமியர் மக்கள் குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், முஸ்லிம் மக்கள் தொகை 51 சதவீதமாக அதிகரித்துள்ள நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுவது காணப்பட்டது.
இது குறித்து பேசிய அவர், "நான் உங்களுக்கு வரலாற்றை சொல்கிறேன். முஸ்லிம் மக்கள் தொகை 51 சதவீதத்தை தாண்டிய நாடுகளில் ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை முடிவுக்கு வந்துவிட்டன" என்றார்.
இந்தியாவில் மதச்சார்பின்மையும், மத நல்லிணக்கமும் பிரச்னைகளாகப் பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு நெட்டிசன்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!