சர்ச்சை வீடியோ... விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்!
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது ஆபாச நிகழ்ச்சி நடந்ததாகவும், அது குறித்த வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும், கண்டனங்களையும் தூண்டியுள்ளது.
ఇందిరా ఆంధ్ర మహిళల వేషధారణ, ఆంధ్రా కల్చర్ తు మీ బ్రతుకు... https://t.co/g66qE3DRvk
— BA_BRS (@Avvinash_1) September 1, 2025
சித்தூர் மாவட்டம், பலமனேர் மண்டலத்தில் உள்ள வட்டுரு கிராமம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. உள்ளூர் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், திரைப்படப் பாடல்களுக்கு பெண்கள் அரைநிர்வாணமாக ஆடினர். இது குறித்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் விநாயகர் சதுர்த்தி போன்ற புனித நாளில், பக்தர்கள் தினமும் வழிபாடுகளில் ஈடுபட்டு, மத ஒழுக்கம் கடைப்பிடிக்க வேண்டும். இந்த மாதிரியான நிகழ்வுகள் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விழாக்களில் மத புனிதம் காக்கப்பட வேண்டிய தருணங்களில் இத்தகைய நடனங்கள் தேவையற்றது என பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.

இந்நிகழ்வுக்கு பல இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில், விழாவை ஏற்பாடு செய்த இளைஞர்கள் மற்றும் நடனக் குழுவைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது மத நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருட விநாயகர் சதுர்த்தியன்றும் திருவிழாவில் நாடு முழுவதும் பல இடங்களில் மேடையில் விநாயகர் சிலை வைத்து இப்படி பெண்கள் ஆபாச நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
