கோடை வெயிலில் செம கூலான அறிவிப்பு... இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!

 
மணிமுத்தாறு அருவி

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அங்கங்கே இன்ஸ்டாகிராம்ல, மொட்டை  மாடியில் வெயிலில் ஆம்லெட் போடுவதும், அடுப்பே இல்லாமல் சப்பாத்தி சுட்டு காட்டுவதுமாக வீடியோ பதிவிட்டு கலாய்த்து வருகிறார்கள். 

இந்நிலையில், கொளுத்தும் வெயிலுக்கு செம கூலான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி  மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து   தமிழ்நாடு வனத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மணிமுத்தாறு

அதில்  களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திலுள்ள சூழல் சுற்றுலாப்பகுதியான மணிமுத்தாறு அருவியில் டிசம்பர் 2023ல் பெய்த கனமழையால் பொது மக்கள் நின்று குளிக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்திருந்தன. பொது மக்கள் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மணிமுத்தாறு அருவிப்பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கபட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குளிக்கும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

மணிமுத்தாறு

 மணிமுத்தாறு அருவியில் தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ஏப்ரல் 26ம் தேதி  வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web