’ மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் கூல் சுரேஷ்!

 
கூல் சுரேஷ்
 

‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

பிரபல யூ-டியூபர் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட  ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து திடீரென டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. செல் அம் இயக்கி வந்த இந்த படத்தில் டிடிஎஃப் வாசன்  உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் அவருடைய கவனம் வேறு பக்கம் இருக்கிறதாகவும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார் இயக்குநர் செல் அம்.

கூல் சுரேஷ்

ஆனால், இதுபற்றி இயக்குநர் தன்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் ஃபோட்டோஷூட், பூஜைக்கெல்லாம் தான் செலவு செய்ததாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் டிடிஎஃப் வாசன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்.

கூல் சுரேஷ்

இது தொடர்பாக பேச பலமுறை இயக்குநரை அழைத்தும் அவர் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் சொன்னார். இப்போது டிடிஎஃப் வாசனுக்குப் பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலா வந்தது. அதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!