‘கூலி’ பட நடிகர் வெளிநாடு செல்ல தடை... நீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
மஞ்சுமெல் பாய்ஸ் கூலி சவுபின் சாகிர்

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகம், கேரளம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே கவனம் ஈர்த்திருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மீது, அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர் படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக நிதி மோசடி புகார் கூறியிருந்தார். அதன்படி படத்தில் தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு தர வில்லை எனவும் இந்த மோசடியால் தனக்கு ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மஞ்சுமேல் பாய்ஸ்

நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் சாகிரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். நிதி மோசடி வழக்கில் கேரள ஐகோர்ட்டு ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கியிருந்தது.  

மேலும் அந்த வழக்கில் நடிகர் சவுபின் சாகிருக்கு பல்வேறு நிபந்தனைகளையும் கோர்ட்டு விதித்திருந்தது. இந்நிலையில் துபாயில் நடக்க உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் சவுபின் சாகிர் திட்டமிட்டிருந்த நிலையில்  இதற்காக துபாய் செல்ல அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

மஞ்சுமெல் பாய்ஸ்

ஆனால் அவரது மனுவை கோர்ட்டு நிராகரித்துள்ளது. "மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தின் தயாரிப்பில் நடந்த நிதி மோசடி வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள உயர்நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்ல அனுமதி கோர சௌபின் சாகிர் திட்டமிட்டு இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தில் இளையராஜாவின் பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருந்தது சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?