செல்போன் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற காவலருக்கு சரமாரி வெட்டு.. 3 பேர் அதிரடியாக கைது!

 
 அப்துல் காதர்

திருச்சி மாநகரில் இரவு நேரங்களில் நடக்கக்கூடிய குற்றங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகரில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு, திருச்சி மாசிங்பேட்டை பீம்நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர்.

இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி பகுதியில் ரோந்து சென்றபோது, ​​சில சிறுவர்கள் செல்போனை பறித்துக்கொண்டு ஓடியதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, அப்துல்காதர் காவிரி பாலம் அருகே ஓடத்துறை பகுதியில் சில சிறுவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்து விசாரித்தபோது, ​​திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அப்துல் காதரை தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு, சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். வெட்டுக்காயங்களில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், அப்துல் காதர் தனது இருசக்கர வாகனத்தை சிந்தாமணி அண்ணாசாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வாசலில் சரிந்து விழுந்தார்.

இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே காவலாளியை வெட்டிவிட்டு தப்பியோடிய சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில்,  புலிசரவணன் (21), சாரதி (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. இவர்களை ரகசிய இடத்தில் வைத்து   தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சிலர் சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க முயன்ற காவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web