பொறியியல் மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது!

 
கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 இன்ஜினியரிங் கல்லூரிகளில், 1.90 லட்சம் இளநிலை இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ள நிலையில், 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கியது.

முதற்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 மாணவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 37 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிரிவில் 8 மாணவர்களுக்கும் என மொத்தம் 125 பேருக்கு இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கலந்தாய்வு

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 10ம் தேதி பொதுப்பிரிவுகளை சேர்ந்த சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மொத்தம் 869 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை 12ம் தேதி வழங்கப்பட்டது.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! செப்டம்பர் 14ல் தரவரிசைப் பட்டியல்!

இந்நிலையில் இன்று ஜூலை 14ம் தேதி காலை பொது கலந்தாய்வு தொடங்கியது. பொதுக்கல்வி, தொழில் முறை கல்வி, அரசுப்பள்ளி 7.5 சதவிகித ஒதுக்கீடு ஆகியற்றுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை துணைக்கலந்தாய்வும், ஆகஸ்ட் 25 முதல் 26ம் தேதிவரை எஸ்சிஏ., எஸ்சி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?