இன்று பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது... ஏஐ, தகவல் தரவிறக்கம் படிப்புகளுக்கு ஆர்வம் அதிகம்!

இன்று ஜூலை 7ம் தேதி, தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகங்களில் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.
சென்னை அண்ணா பல்கலையின் கீழ், 463 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. 2025- 26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடந்தது. இதில், 3 லட்சத்து 2,374 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 2 லட்சத்து 49,883 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்; 2 லட்சத்து 26,359 மாணவர்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து உள்ளனர்.
கடந்த ஜூன் 27ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 14ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 17ம் தேதி முடிவடைகிறது.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் இன்று ஜூலை 7ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை நடைபெறுகிறது. துணைப் பிரிவு கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை நடக்கிறது.
200க்கு 200 என்ற கட் ஆப் எடுத்த மாணவர்கள் 145 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை எண்ணை தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 40,645 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்” என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!