தம்பதிகளே... 60ம் கல்யாணம் செய்ய போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

 
முதியோர் தம்பதி குடும்பம் பென்ஷன் மூத்த குடிமக்கள் வயதானோர்

அறுபதாம் கல்யாணம் செய்ய திட்டமிட்டு இருக்கீங்களா? முதலில் தினமாலை சார்பில் எங்களுடைய வாழ்த்துக்கள். இந்த விஷயங்களை எல்லாம் ஒரு முறை ரீவைண்ட் பண்ணி பார்த்துக்கோங்க. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல் மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதும் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சத்தியமான வார்த்தைகள். கல்யாணம் என்பது ஒவ்வொரு மனுஷனுக்கும் அடுத்த பிறப்பு மாதிரி தான். அவனை கைத்தாங்கலாக தனது சொந்த பந்தங்களை விட்டு விலகி, ஆயுசுக்கும் கூடவே துணையாய் வருவேன் என்கிற மனைவியை இன்னொரு தாயாய் பார்க்கும் கணவன் கிடைப்பது பெண் செய்த அதிர்ஷ்டம்.

ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் 60ம் கல்யாணம் என்பது இன்னொரு மைல்கல் தான். அம்மா, மாமியார், நாத்தனார் என திருமணத்தின் போது இழந்த சந்தோஷங்களையோ, எனக்குப் பிடிச்ச ப்ளூ கலர்ல வாங்காம, உங்க தங்கச்சி சொன்னான்னு பச்சைக் கலர்ல கல்யாண புடவையை வாங்கியிருந்தீங்களே... என்று 60 வயது வரையிலும் சொல்லிக் காட்டி, இடித்துக் கொண்டிருந்த மனைவியை திருப்திப்படுத்த கணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு. இந்த முறை எதையும் மிஸ் பண்ணாதீங்க.

சரி.. ஒவ்வொரு வயசு கல்யாணத்தின் போதும் என்ன பெயர் சொல்லி அழைக்கிறாங்க.. என்ன பலன்கள்னு தெரிஞ்சுக்கலாமா?

நம்முடைய 70வது வயது தொடங்கும் போது மறக்காம பீமரத சாந்தி செய்ய வேண்டும். சரி.. அதென்னா பீமரத சாந்தி?

திருமணம் கல்யாணம் கும்பம்

பீமரதன் என்பது ஒரு மிருத்யுவுடைய பெயர். அந்த மிருத்யுவினை சாந்திப்படுத்துவதற்கு உண்டான பூஜைகளுக்கு பீமரத சாந்தி.

ஒருவருக்கு அவருடைய 70 வது வயது தொடங்கும் போது இதைச் செய்ய வேண்டும். இதை ஒரு கண்டம் என்றும் சொல்லலாம். இந்த கண்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

ஒருவருக்கு அவருடைய 48, 54, 61, 70, 81 வயது முடிந்து மூன்று மாதம் கழித்து, 100வது வயதுகளில் சில பரம்பரை ரீதியிலான மரபு பிரச்சனைகளோ, சில கண்டங்களோ ஏற்படும் என்று நம் முன்னோர்கள் அனுமானித்து, அதற்கான சில எளிய பரிகாரங்களையும் வகுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி ஒருவர் தன்னுடைய 70வது வயதில் செய்து கொள்வதற்குப் பெயர் பீமரத சாந்தி.

நமது ஆயுளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான தேவதைகளின் கட்டுப்பாட்டில் வளர்கிறோம். குழந்தை இந்த பூமியில் பிறந்து 1வது வயது வரை ஆயுர் தேவதை எனப்படும் அக்னியின் ஆட்சிக்குள் அடங்குகிறோம். அதனால் தான் அந்த ஆயுர் தேவதைக்கு ப்ரீதியாக முதல் வயது பூர்த்தி அடையும் போது ஆயுஷ்ய ஹோமம் செய்வார்கள்.

அதன் பின்னர், ஒருவர் அவருடைய 20வது வயது வரை மனிதன் பிரம்மாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதனால் தான் ஒருவருக்கு 20 வயதிற்குள் பிரம்மோபதேசம் செய்யப்படுகிறது. 20வயதுடையவனை இளைஞன் என்று அழைக்கிறோம்.

அதன் பின்னர், 40 வயது வரை விஷ்ணுவின் ஆட்சி நடக்கிறது. ஒருவன் தானம் செய்வதற்கும், தானம் பெறுவதற்கும் தகுதியாவது இந்த கால கட்டத்தில் தான். திருமணம் செய்து கொள்ள கன்யாதானம் வாங்கிக் கொள்ளும் வாலிபனை நாராயண ஸ்வரூபனாக சாஸ்திரம் வர்ணிக்கிறது.

40வயது முதல் ருத்ரனின் கட்டுப்பாட்டிற்குள் மனிதன் வருகிறான். ருத்ரனுக்கு பல்வேறு ரூபங்கள் உண்டு. 59 வயது முடிந்து 60வது வயது துவங்கும் போது உக்ரரத சாந்தி என்று அழைக்கப்படும் உக்ரரத ருத்ரனுக்கான பூஜையை செய்ய வேண்டும். 60வயது பூர்த்தி அடைந்து 61 துவங்கும் போது செய்வதை சஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி என்று சொல்கிறோம். 69 வயது முடிந்து 70வது வயது துவங்கும் போது பீமரத ருத்ரனுக்கான பூஜையை செய்கிறோம்.

ரூ. 35,000 பணத்துக்காக சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்..!!

77 வருடம், 7 மாதம், 7வது நாள் அன்று விஜயரத சாந்தி என்று விஜயரத ருத்ரனுக்கு ப்ரீதி செய்யும் விதமாக பூஜைகளை நடத்துகிறோம்.

80வது வயது முதல் மனிதன் மீண்டும் பிரம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறான். 80வது வயதில் செய்யப்படும் பூஜையானது சதாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.

அதனால உங்களோட 60ம் கல்யாணத்தோட நிறுத்திக்காதீங்க.. 70, 80ன்னு கல்யாண நாளை மிக சிறப்பா கொண்டாட வாழ்த்துக்கள்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web