அச்சச்சோ... கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவு ஏற்படலாம்... தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம்!

 
கோவிஷீல்டு

 2019ம் ஆண்டு கடைசியில்  சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உலகின் பல்வேறு நாடுகள்  கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தின. அந்த வகையில் இங்கிலாந்து நிறுவனத்தின்  அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு  தடுப்பூசியை உருவாக்கின.

மெகா தடுப்பூசி முகாம்

இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.   ஜேமியை தொடர்ந்து இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில்  கோவிட் தடுப்பூசி ஒரு அரியவகையான  பக்க விளைவை ஏற்படுத்தலாம் என ஒப்புக்கொண்டது. இதனை  தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கையை உருவாக்கலாம்.  

கோவிஷீல்டு

இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோஜினிகா நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.  
இந்தியாவில் மட்டும்  சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள்  போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!