எல்லை மீறும் பசு காவலர்கள்.. எலுமிச்சையை ஏற்றி சென்றவர்கள் மீது கொடூர தாக்குதல்!

 
பசு காவலர்கள்

ஜூன் 30ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பதிண்டாவுக்கு எலுமிச்சை பழங்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அன்றிரவு, ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் பசு காவலர்கள் என்று கூறிக்கொண்டு ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லசிடி சுங்கச்சாவடி அருகே லாரியை முந்திச் சென்று, லாரியில் இருந்த இருவரையும் மாடுகளை திருடிச் சென்றதாகக் கூறி கடுமையாகத் தாக்கினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சோனு பிஷ்னோய் (29), சுந்தர் பிஷ்னோய் (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில்,   தரையில் படுத்திருக்கும் இருவரை   ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மீண்டும் மீண்டும் தாக்குவதைக் காட்டுகிறது.

அந்தக் கும்பல் அவர்களின் முகத்தில் செருப்பால் அடிப்பதும், தலையில் எட்டி உதைப்பதும் தெரிகிறது. இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாடு முழுவதும் பசுக் காவலர்களின் வழிப்பறி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடூரச் செயல்கள் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே குறிவைக்கின்றன.

முன்னதாக ஜூன் 16 அன்று, ஹரியானாவில் இறைச்சிக் கடையில் பசு காவலர்கள் நடத்திய சோதனையில் ஒரு முஸ்லீம் கடைக்காரர் மற்றும் இரண்டு இந்து ஆண்கள் காயமடைந்தனர். அடுத்ததாக, ஜூன் 15ஆம் தேதி, ஹரியானா மாநிலம் மேவாட் கிராமத்தில் கால்நடைகளை அறுத்ததாகக் கூறி இரண்டு முஸ்லிம் ஆண்களை துப்பாக்கி ஏந்திய போலீஸார் தாக்கினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web