விநோதம்... அலங்கரிக்கப்பட்டு மனிதர்களை மிதித்த மாடுகள்... !!

தீபாவளி பண்டிகை நேற்று நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெவ்வெறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 நாள் திருவிழாவாக வெவ்வேறு மத சடங்குகளுடன் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் மத சடங்குகளை மேற்கொண்டனர்.
உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தெஹ்சில் பிடவாட் கிராமத்தில் இந்த திருவிழா நடத்தப்பட்டது.
அந்த சமயத்தில் மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விடப்படும். சில நபர்கள் அதன்முன் படுத்து விடுகின்றனர்.அப்போது கீழே படுத்து இருந்த நபர்கள் மீது அந்த அலங்கரிக்கப்பட்ட மாடுகள், கன்றுக்குட்டிகள் ஓடி வருகின்றன. மாடுகளை தங்கள் மீது மிதித்து ஓட விடுவதன் மூலம் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!