சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு!

 
சி.பி.ராதா கிருஷ்ணன்


தமிழ்நாட்டின் மூத்த  பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன். இவர்  தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநரும் ஆவார்.  சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இந்த முடிவு பிரதமர்  மோடி தலைமையிலான பாஜக பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தற்போது, துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.  

அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, இப்படியான முடிவை பாஜக எடுத்திருப்பதாக  கூறுகின்றனர். என்டிஏ கூட்டணியின் பெரும்பான்மை ஆதரவு (422 எம்.பி.க்கள்). இதன்  காரணமாக, 781 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவில் ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருப்பதாகக்  கருதப்படுகிறது.செப்டம்பர் 9ம் தேதி  நடைபெறவுள்ள துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர் போட்டியிடுகிறார்.  

ஆகஸ்ட் 21ம் தேதி பரிந்துரைப் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக கூறப்பட்டுள்ளது.   ஜகதீப் தன்கர் உடல்நலக் குறைபாடு காரணமாக  பதவி விலகியதை அடுத்து இப்பதவி காலியாகியது. இந்த முடிவு குறித்து  பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “திரு சி.பி.ராதாகிருஷ்ணன் தனது நீண்ட பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவாற்றலுடன் தனித்து நிற்கிறார். அவர் வகித்த பல்வேறு பதவிகளில், சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அவர் அடிமட்டத்தில் விரிவான பணிகளைச் செய்துள்ளார்,” எனப் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?