பட்டாசு கடையில் வெடி விபத்து.... விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் சோகம்!!

வெடிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துகுலனத்தில் அந்த பகுதி சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பட்டாசு மற்றும் புத்தாடை விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் தகுந்தபாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் வைக்கப்பட்ட பட்டாசுகளும் வெடித்து சிதறி தொழிலாளிகள் சின்னாபின்னமாகி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின.
உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்ட குடவாசல் சாலையில், அருகருகே 50க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், கடையில் யாரேனும் வேலை செய்து வந்தார்களா? யாருக்கும் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருகிறதா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதுவரை அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக, கர்நாடக எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து தமிழகத்தையே உலுக்கியது. இங்கு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது. இந்த பட்டாசு கடையில் 20 பேர் பணி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 15 பேர் உட்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வருடம் நடைபெற்ற மிக்பெரிய விபத்துகளில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!