சிதறும் பட்டாசுகள்... திணறுது மூச்சு... சென்னை உட்பட 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

 
பட்டாசு

சென்னை உட்பட தமிழகத்தின் 3 மாவட்டங்களில் வெடித்து சிதறும் பட்டாசுகளால் காற்று மாசு அதிகரித்துள்ளது. தமிழக அரசு, பட்டாசு வெடிக்க 2 மணி நேர கட்டுப்பாடு விதித்ததெல்லாம் காற்றோடு பறந்து போனது. பல இடங்களிலும் இந்த நேர கட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் கவலைப்படாமல் அடுத்தடுத்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் தீபாவளியையொட்டி, நேற்றிரவு முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, அதிர வைத்தனர். இதன் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

புகை மண்டலமாக காட்சி அளிக்கும் சென்னை

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசும் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ள நிலையில் இதுபோன்ற கட்டுப்பாட்டை அரசு கடந்த சில ஆண்டுகளாக விதித்து வருகிறது.

பட்டாசு

இதன் காரணமாக சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுமாசு தரக்குறியீடு 100 முதல் 200 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் காற்றின் தரம் மிதமான மாசு என்ற நிலைக்குச் சென்று இருக்கிறது. சென்னை பெருங்குடியில் - 178, அரும்பாக்கம் - 159, மணலி - 152, ராயபுரம் - 115, கொடுங்கையூர் - 112, ஆலந்தூர் - 102 என அதிகரித்து இருக்கிறது. கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு தரக் குறியீடு 231 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் காற்று மாசு மோசமடைந்து இருக்கிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web