பகீர் வீடியோ... விமானத்திலிருந்து தலைக்குப்புற விழுந்த ஊழியர்!

 
விமான விபத்து

விமானம் புறப்பட இருந்த நிலையில், விமானத்திற்குள் பணியில் இருந்த போது, தவறுதலாக கவனிக்காமல் ஏணியை கீழிருந்த ஊழியர்கள் அகற்றியதால், தவறி விமானத்தில் இருந்து தலைக்குப்புற ஊழியர் ஒருவர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தென்கிழக்கு ஆசியா நாடான இந்தோனேசியாவின் டிரான்ஸ்நுசா விமானத்தின் உள்ளே சென்று ஆய்வு செய்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், ஆய்வை முடித்துவிட்டு இறங்க முயற்சித்தார்.  அவர் உள்ளே இருப்பதை கவனிக்காத பிற ஊழியர்கள், இறங்குவதற்கு வைக்கப்பட்டிருந்த படிக்கட்டை அங்கிருந்து அகற்றி விட்டனர்.  


அந்த ஊழியர் விமானத்தின் கதவை திறந்து படிக்கட்டில் கால் வைத்தபோது, படிக்கட்டு நகர்ந்ததால் நொடிப்பொழுதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புனேயின் லோஹேகான் பகுதியைச் சேர்ந்த விவின் அந்தோணி டொமினிக் என்பது தெரியவந்தது.

 

விமான கதவு மூடப்படுவதற்கு முன்பே ஏணியை எதற்கு ஊழியர்கள் அகற்றினார்கள் என்றும் இது முழுக்க முழுக்க அவர்களின் அலட்சியத்தை காட்டுவதாகவும், இந்த வீடியோவை பார்த்தவர்கள் விமான நிலைய நிர்வாகத்தை விமர்சனம் செய்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!