பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயசூரியவின் தாயார் காலமானார்... நாளை இறுதிசடங்குகள்!

 
பிரபல கிரிக்கெட் வீரர் ஜெயசூரியவின் தாயார் காலமானார்... நாளை இறுதிசடங்குகள்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியவின் தாயார் பிரிடா ஜெயசூரிய காலமானார். அவருக்கு வயது 80. 

தனது சொந்த ஊரான மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரிடா ஜெயசூரிய சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரியா அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தனது தாயார் காலமான செய்தியை அறிந்த நிலையில் அவர் மீண்டும் நாடு இலங்கை திரும்புகிறார். 

அவரது தாயாரின் இறுதி சடங்குகள் நாளை ஜூன் 5ம் தேதி இலங்கையில் மாத்தறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web