நெகிழ்ச்சி வீடியோ... தூங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு பணம் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்... !!

 
குர்பாஸ்

 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, 2023 உலகக் கோப்பை போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவில்லை. இருந்த போதிலும்   மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருந்தது.


 

 மொத்தம் 9  போட்டிகளில் கலந்து கொண்டு 4 வெற்றிகளைப்  பெற்றிருந்த  ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் போராடி வெற்றி வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குர்பாஸ்

அதில் அகமதாபாத் சாலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வீடில்லாத மக்களுக்கு அவர் அமைதியாக பணத்தை விநியோகிக்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  காரில் புறப்படுவதற்கு முன், தெருக்களில் தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு அருகில் சென்று அமைதியாக பணத்தை வைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவரின் செயலுக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web