மணிப்பூரில் பதட்டம்... பயங்கரவாதத் தாக்குதலால் 2 சிஆர்பிஎப் வீரர்கள் பலி!

 
மணிப்பூர்

 இந்தியா முழுவதும் 2வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வாக்குப்பதிவில்   மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூர்

 எனினும், மணிப்பூரில் நேற்று நடந்த 2வது கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்ததாக  மணிப்பூரின் தலைமை தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் கூறியுள்ளார். 2வது கட்ட மக்களவை தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்களித்தனர். கடைசியாக கிடைத்த அறிக்கையின்படி, 75 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவித்தார்.  தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு குறித்து அதிகாரப்பூர்வ  செயலியில், 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 2.15 மணிக்கு  குகி பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிகிறது.  இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web