கொடூரம்... 4,500 வீடியோக்கள்... மருத்துவமனை பாத்ரூமில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச படம் எடுத்த டாக்டர்!

 
லேடீஸ் ஹாஸ்டல் ரகசிய கேமிரா செல்போன் குளியலறை வீடியோ பாத்ரூம்

மருத்துவமனை கழிவறையில் ரகசியமாக கேமரா பொருத்தி ஆபாசமாக படம் பதிவு செய்த மருத்துவமனை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை ஒன்றில், பாத்ரூமில்  யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கேமரா  பொருத்தப்பட்டு இருந்ததை பெண் மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.

மருத்துவர்

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக பாத்ரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ரயான் சோ (28) என்ற மருத்துவர், தினந்தோறும் இரவு நேரத்தில் கழிவறைக்குள் சென்று வருவதை கண்டு பிடித்தனர். சிங்கப்பூர் வம்சாவளியை சேர்ந்தவரான அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரித்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

போலீசாரின் விசாரணையில்ம் அவருடைய சபல புத்தி காரணமாக மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாசமாக பெண் மருத்துவர்கள் குளிப்பதையும் வீடியோ எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். 2021ம் ஆண்டு பயிற்சி மருத்துவராக பணியில் சேர்ந்ததில் இருந்து இதில் ஈடுபட்டுள்ளார். அவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினிகளில் இருந்த 4,500 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டநிலையில் அவருடைய சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை முடக்கினர். தற்போது ரூ.28 லட்சம் பிணைத்தொகை செலுத்தப்பட்டதன் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?