கொடூரம்... 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
வளைகாப்பு கர்ப்பம் கர்ப்பிணி

நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அத்திமரப்பெட்டி வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள். இதில் மூத்த மகளான ரேவதி புஷ்பத்திற்கும் (30), மெஞ்ஞானபுரம் அருகே உள்ள திருராமநல்லூரை சேர்ந்த செம்புலிங்கம் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ½ வயதில் சுபிக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

ஆம்புலன்ஸ்

தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், அவரது தம்பி நாகார்ஜூன் (18) திருராமநல்லூரில் இவரது வீட்டில் தங்கியிருந்து திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறாா். இந்த நிலையில் அக்காள், தம்பி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தம்பி தன்னுடன் பேசாமல் இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டாராம்.

போலீஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசாார் சம்பவ வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?