சினிமாவை விஞ்சிய கொடூரம்.. ஒருதலை காதலால் பள்ளி மாணவனை கடத்திய கும்பல்!

 
விழுப்புரம் மாணவன்  கடத்தல்

விழுப்புரத்தை சேர்ந்த 17 வயது மாணவன் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த மாணவனை 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி கடத்தியது.

கடத்தல்

மாணவன் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடிய பின், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் பள்ளி முன்பு ஒரு கும்பல் அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து கடத்திய நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கடலூர் மாவட்டம் தோப்பிலியாகுப்பம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் விமல்ராஜ் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (வயது 29), சீர்காழி சுசீந்திரன் (வயது 25), விருத்தாசலம் அருகே ரோமாபுரியை சேர்ந்த எட்வின்ராஜ் (வயது 28),  வேளச்சேரியை சேர்ந்த இரு  சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களது செல்போன் சிக்னல் சோதனையில் அவர்கள் நெய்வேலியில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். நேற்று அங்கு சென்று மாணவனை மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 8 பேரையும் விசாரணைக்காக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கடத்தப்பட்ட மாணவன் , தனியார் பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உறவினரான சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த வாலிபரும், கடத்தலில் ஈடுபட்ட விமல்ராஜும் நண்பர்கள். இவரது உறவினர் அதே தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், ஒருதலைப்பட்ச காதல் பற்றி அறிந்ததும், வேளச்சேரியில் உள்ள தனது நண்பரிடமும் இதுபற்றி கூறியுள்ளார்.

கைது

இதனால் ஆத்திரமடைந்த வேளச்சேரியை சேர்ந்த வாலிபர் மாணவனை கடத்தி மிரட்ட திட்டமிட்டார். இவர் தனது நண்பர் விமல்ராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து மாணவனை கடத்தி பிளாக்மெயில் செய்தது தெரியவந்துள்ளது. சினிமாவை மிஞ்சிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து விமல்ராஜ், ராகுல்ராஜ், சுசீந்திரன், எட்வின்ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் இருவர் மைனர் என்பதால், அரசு காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web