கொடூரம்... 92 மணி நேரமாக ஆழ்துளைக் கிணற்றுள் உயிருக்குப் போராடும் சிறுமி... 5வது நாளாக தொடரும் மீட்பு பணி!

 
சேத்னா

ராஜஸ்தான் மாநிலத்தில் 92 மணி நேரத்தைக் கடந்தும் 700 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றுக்குள் உயிருக்குப் போராடி வரும் 3 வயது சிறுமியை மீட்க மீட்பு பணியினர் இன்று 5வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றை ஒட்டி சுரங்கப்பாதை அமைக்க மீட்புப் பணியாளர்கள் பைலிங் இயந்திரம் மூலம் குழி தோண்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் கிராத்புரா மாவட்டம் தானியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சேத்னா 5வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மீட்கப்படவில்லை.

கிராத்புரா தானியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது சிறுமி சேத்னாவை மீட்கும் பணி தொடங்கி குறைந்தது 92 மணி நேரம் கடந்து விட்டது. ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், ஆழ்துளை கிணற்றை ஒட்டி 90 டிகிரியில் எட்டு அடி நீள கிடைமட்ட சுரங்கப்பாதை அமைக்க மீட்புக் குழுவினர் பைலிங் இயந்திரம் மூலம் 170 அடி தோண்டினர்.

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் லேசான மழை காரணமாக மீட்புப் பணிகள் நேற்று பாதிக்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மீட்பு குழுவினர் பணியைத் தொடர்ந்தனர். இன்று காலை அந்த பகுதியில் மழை நீடித்ததால் குழுவினர் அந்த இடத்தில் தார்பாய் போட்டனர். 

இது குறித்து கூடுதல் எஸ்பி வைபவ் சர்மா கூறுகையில், "என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு மீட்பு பணி இடைவேளையின்றி நடந்து வருகிறது. பயிற்சி பெற்ற மீட்புப் பணியாளர்கள் பைலிங் மிஷின் மூலம் குழி தோண்டி, கேசிங் பைப்பை வெல்டிங் செய்கின்றனர். அதன் பிறகு என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் கீழே இறக்கப்படுவார்கள். குழியை மாற்றியமைத்து, கிடைமட்ட தோண்டுதல் மூலம் சிறுமியை அடைய முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.

மீட்பு பணி

சேத்னாவை பத்திரமாக மீட்க மீட்புக் குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். மழையால் சில சிரமங்கள் ஏற்பட்டாலும், அணியின் உற்சாகம் குறையவில்லை. NDRF மற்றும் SDRF இன் சிறப்புக் குழுக்களுடன் மாவட்ட நிர்வாகமும் இந்த நடவடிக்கையில் தீவிரப் பங்கு வகிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து சிறப்புக் குழு வரவழைக்கப்பட்டு, குழாய் பதிக்கும் இயந்திரம் மூலம் தொடர்ந்து தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த டிசம்பர் 23ம் தேதி மதியம் 1:30 மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. முதலில் 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை, நேரம் செல்லச் செல்ல 150 அடி ஆழத்திற்கு சறுக்கி விழுந்தது. குழந்தை சாத்னாவின் அலறல் சத்தம் கேட்டு ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. 

இந்த சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள், மருத்துவ பணியாளர்களுடன், பாதுகாப்பு நெறிமுறைகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து, சம்பவ இடத்திலேயே உள்ளன. மீட்புப் பணிகள் எந்த இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!