கொடூரம்... கணவனைக் கட்டிப்போட்டு.. மின்சாரம் பாய்ச்சி கொலை... மனைவி பரபரப்பு வாக்குமூலம்!

 
பார்வதி

தனது முன்னாள் கணவரின் கைகளையும், கால்களையும் கட்டி, அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் மனைவி. சத்தீஸ்கர் மாநிலம் பால்ராம்பூர் மாவட்டம் அதௌரா கிராமத்தில் வசித்து வந்தவர் மனோஜ் குப்தா. இவர் ஜூலை 29ம் தேதி, ஒரு வீட்டில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  

அவரது முதல் மனைவி பார்வதி குப்தாவின் வீட்டில் இந்த சம்பவம் நடந்தது. முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடுக்கு பிறகு 2வது திருமணம் செய்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

மின்சாரம்

 பார்வதி தனது முன்னாள் கணவரிடம் “வீட்டில் மின்சாரம் இல்லை, சரி பார்த்து கொடுக்க முடியுமா?” என கேட்டுள்ளார்.  வீட்டிற்கு வந்த மனோஜ் குப்தாவை, அவர்,  திடீரென கைகளையும், கால்களையும் கட்டி, ,மனோஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தார். அதை ஒரு விபத்து போல காட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால் மனோஜின் 2வது மனைவி மனோஜின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  

மின்சாரம்

மரணமான மனோஜின் உடலில் தீக்காயங்கள், மின்கம்பிகள், கைகால்கள் கட்டப்பட்ட தடயங்கள் இருந்ததால், இது தற்கொலை அல்ல, கொலை என உறுதி செய்யப்பட்டது.  முதல் மனைவி பார்வதி பழிவாங்கும் நோக்கத்தில் இக்கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து, பார்வதி குப்தாவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.  .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?