கொடூரம்... அடுத்தடுத்து 21 மாணவிகளிடம் அறிவியல் ஆசிரியர் பாலியல் அத்துமீறல்!

 
செந்தில்குமார்

தமிழகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நினைத்தால், ‘நீங்க ஒரு ஆணியையுமே புடுங்க வேண்டாம்’ என்று வாய் விட்டு அலற தோன்றுகிறது. வேலியே பயிரை மேய்வது போல பல மாவட்டங்களிலும், அடுத்தடுத்து ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிற சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஈடுபட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளார்.  இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அந்தப் பள்ளியில் 6 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்து வருகிறார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை!! 15 வயது சிறுவன் பகீர் வாக்குமூலம்!!

இந்நிலையில் அந்த அரசுப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். அப்போது உடலில் நல்ல தொடுதல், (good touch) கெட்ட தொடுதல் (bad touch) குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த 6ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர்  அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். இதேபோல் பல மாணவிகளும் ஆசிரியர் செந்தில்குமார் தங்களின் மார்புப் பகுதி மற்றும் உடலின் பின்புறம் உள்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றனர்.

அடுத்த சில நேரங்களில் மாணவிகளுக்கு அவர் முத்தம் கொடுத்ததாகவும் மாணவிகள் புகார் கூறினர். முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவிகள் செந்தில்குமார் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். 

மாணவிகளின் இந்த புகாரின் பேரில் ஊட்டி ஊரக ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மாணவி பாலியல் வழக்கு!! ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது  குண்டர் சட்டம்!!

இந்தநிலையில், போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் செந்தில்குமார், நீலகிரி ஆட்சியரின் பரிந்துரையின் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் செந்தில்குமார் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை, அவர்களுக்கு பிணையும் வழங்கப்படாது. அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால், முன்கூட்டியே விடுவிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?