கொடூரம்... மரண ஓலம்... கொத்து கொத்தாக சடலங்கள்... ஆப்கானிஸ்தானில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்வு!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 330 ஆக உயர்ந்துள்ளது. திரும்புகிற இடங்களில் எல்லாம் மரண ஓலம் என்று கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தான் மயான பூமியாக உருமாறியது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக  அதிகனமழை பெய்ததால் நாட்கள்  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அதிலும் குறிப்பாக, பெருமழை, வெள்ளத்தால் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாக்லான் மாகாணம் கடும் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். குடியிருப்புக்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன.  

ஆப்கானிஸ்தானின் பர்கா, நஹரின் மற்றும் மத்திய பாக்லான் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் சென்றடைந்துள்ளன. இது குறித்து  தலிபான் பொதுச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் “ ஆப்கானிஸ்தானில் பெய்த பெருமழையால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்கள் மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரம் காரணமாக, உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை  கண்டறியப்படவில்லை” எனக் கூறியுள்ளார். 

ஆப்கானிஸதான்

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெருமழை வெள்ளத்தில் சிக்கி 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான உணவுகள், ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வழங்கி  வருவதாகவும் தெரிவித்துள்ளது.  வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பாக்லானின் இயற்கைப் பேரிடர் தலைவர் ஹிதயதுல்லா ஹம்தார்ட் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web