ஐபிஎஸ் அதிகாரி மீது தோனி நீதிமன்றத்தில் வழக்கு... நாளை விசாரணை!

 
தோனி

கடந்த 2013 ம் ஆண்டு ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில், நிகழ்ந்த சூதாட்டம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். 

தோனி

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சம்பத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், சம்பத் குமார் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து தோனி தாக்கல் செய்த மனுவிற்கு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். இதில், நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோனி தரப்பில் கோரப்பட்டது. மேலும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

தோனி

இந்த நிலையில், தோனி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை நாளை (வியாழன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web