அண்ணாமலைக்காக இடது கை பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன்... பாஜக பிரமுகர் வெறித்தனம்!

 
நயினார் நாகேந்திரன்

 தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை  வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு  பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகத்தை  பொறுத்தவரை கோவை மக்களவைத் தொகுதி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிந்த நிலையில் அனைத்து அரசியல்  கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு பாஜகவினர்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட பாஜக துணை தலைவராக இருக்கும் கடலூர் மாவட்டம் ஆண்டாள் முள்ளி பாளையம்  துரை ராமலிங்கம்   கோவை நாடாளுமன்ற தொகுதியில் அண்ணாமலைக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு
தொடர்ந்து 10 நாட்களாக கோவையில்  வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்த இவர்  நேற்று மாலை 5 மணி அளவில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். அத்துடன் திடீரென தனது இடது கை ஆள்காட்டி விரலை கத்தியை எடுத்து துண்டித்துக் கொண்டார்.  தான் பிரச்சாரம் செய்தபோது அருகில் இருந்தவர் அண்ணாமலை தோல்வியை சந்திப்பார் என கூறியதாகவும் அண்ணாமலை  வெற்றி பெற வேண்டி தனது கைவிரலை துண்டித்துக் கொண்டதாகவும் பாஜக பிரமுகர் துரை ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web