க்யூட் வீடியோ... நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி அப்பாவாகிறார்.. குவியும் வாழ்த்துக்கள்!
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி அப்பாவாகிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியாக வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘டாக்டர்’, ‘பீஸ்ட்’, 'ஜெயிலர்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்க்ஸ்லி ரசிகர்களிடையே பரவலான கவனத்தைக் குவித்து வருகிறார். கிங்க்ஸ்லிக்கும் சின்னத்தை நடிகையும், தொகுப்பாளினியுமான சங்கீதாவுக்கும் கடந்த வருடம் திருமணமான நிலையில், இருவரும் தங்களது பணியில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் சின்னத்திரை நடிகை சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது கணவர் ரெடினுடன் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சங்கீதா, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். தம்பதியருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!