க்யூட் வீடியோ... குட்டி யானை அட்ராசிட்டி... ஏம்மா... ஏய்... எனக்கும் கொஞ்சம் காய்கறி கொடு!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கின்றன. அதே போல் ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Bro just casually collected his cuteness tax 😂😂 pic.twitter.com/72vyKYh5Sn
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 24, 2025
அந்த வீடியோவில் ஒரு வியாபாரி ஒரு பெண்ணுக்கு காய்கறிகளை விற்றுக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக சில யானை கூட்டம் வருகிறது. அதில் 3 பெரிய யானைகளும், ஒரு குட்டி யானையும் அந்த வழியாக செல்கிறது. அப்போது இந்த காய்கறிகளை பார்த்த குட்டியானை தள்ளு வண்டியை நோக்கி நடந்து செல்கிறது.
இதனையடுத்து வண்டியின் உரிமையாளர் பயந்து ஒதுங்குகிறார். அந்த குட்டியானை அதிலிருந்து காய்கறிகளை எடுக்க முயற்சிக்கிறது. அதனால் முடியவில்லை. இதனால் அங்கிருந்த பெண் ஒருவர் தனது கையில் எடுத்து யானைக்கு கொடுத்து விடுகிறார்.
அதனை அந்த குட்டியானை அழகாக பிடுங்கிக் கொண்டு வேகமாக தனது தாயுடன் சென்று விடுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!